Jul 20, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானின் பொற்காலம்: டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூனின் தொலைநோக்கு ஆளுமையில் மலரும் வரலாற்றுச் சாதனைகள்!
சிறப்பு செய்திகள்

நெகிரி செம்பிலானின் பொற்காலம்: டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூனின் தொலைநோக்கு ஆளுமையில் மலரும் வரலாற்றுச் சாதனைகள்!

Share:

மாற்றமும் வளர்ச்சியும் வெறும் வார்த்தைகளல்ல, அவை முறையான ஆளுமையின் மூலம் நனவாக்கப்பட வேண்டிய இலக்குகள் என்பதை நெகிரி செம்பிலான் மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக நிரூபித்துக் காட்டி வருகிறது. பக்காத்தான் ஹரப்பான் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ், நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன் அவர்களின் தலைமைத்துவம், மாநிலத்தை அனைத்துத் துறைகளிலும் ஒரு மாபெரும் பொருளாதார மற்றும் சமூக மறுமலர்ச்சியை நோக்கி வழிநடத்தியுள்ளது.

2018-ஆம் ஆண்டில் அவர் மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல், நிதி நிலைத்தன்மை, மக்கள் நலம், உள்கட்டமைப்பு என அனைத்துப் பிரிவுகளிலும் வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மலேசியாவின் முன்னணி பொருளாதார மாநிலங்களின் வரிசையில் நெகிரி செம்பிலானை ஆறாவது இடத்திற்கு உயர்த்தி, தன் நிர்வாகத் திறனை உலகிற்குப் பறைசாற்றியுள்ளார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன்.

வரலாற்றுச் சாதனை படைத்த முதலீட்டுப் புரட்சி

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பொருளாதார வரலாற்றில் அமினுடின் ஹரூனின் ஆட்சிக்காலம் ஒரு 'முதலீட்டுப் புரட்சி' யுகமாகவே பார்க்கப்படுகிறது.

• பிரம்மாண்ட உயர்வு: கடந்த 2017-ஆம் ஆண்டில் வெறும் RM1.4 பில்லியனாக இருந்த மாநிலத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு, இவருடைய ஆட்சியில் பல மடங்கு உயர்ந்து அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

• 2025-இல் வரலாற்று உச்சம்: மாநில வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத சாதனையாக, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் நெகிரி செம்பிலான் அரசு RM19.1 மில்லியன் முதலீட்டை ஈர்த்துப் புதிய சாதனைப் படைத்தது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் முதலீட்டுடன் ஒப்பிடுகையில் 164% மிக அதிகமாகும்.

• உயர் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள்: இந்த பிரம்மாண்ட முதலீடுகள் வெறும் எண்களாக மட்டுமே நின்றுவிடாமல், மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அதிநவீன உயர் தொழில்நுட்பத் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளன.

வலுவான நிதி மேலாண்மையும் உபரி வருவாய் சாதனையும்

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதன் நிதி நிர்வாகமே அஸ்திவாரம். அந்த வகையில், நெகிரி செம்பிலானின் நிதி நிலைத்தன்மையை டத்தோ ஸ்ரீ அமினுடின் மிகக் கவனமாகச் செதுக்கியுள்ளார்.

• தொடர் உபரி வருவாய்: முறையான, வெளிப்படையான நிதி நிர்வாகத்தின் காரணமாக, நெகிரி செம்பிலான் மாநில அரசு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 'உபரி வருவாய்' ஈட்டி நிதிப் பற்றாக்குறையற்ற மாநிலமாகத் திகழ்கிறது.

• வருவாய் இலக்கு தாண்டல்: மாநிலத்தின் வருவாய் இலக்காக RM520 மில்லியன் நிர்ணயிக்கப்பட்டிருந்த வேளையில், திறமையான வரி வசூலிப்பு மற்றும் புதிய வருவாய் வழித்தடங்கள் மூலம், இலக்கைத் தாண்டி வரலாற்று உச்சமாக RM636 மில்லியன் வருவாயைச் சேகரித்து மாநில அரசு சாதனைப் படைத்துள்ளது.

நவீன உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் எதிர்காலச் சவால்களுக்கு ஏதுவாக மாநிலத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதில் மந்திரி பெசார் தீவிரம் காட்டி வருகிறார்.

• டிஜிட்டலில் முதலிடம்: தேசிய டிஜிட்டல் திட்டங்களை முழுமையாகவும் மிக வேகமாகவும் செயல்படுத்திய மலேசியாவின் முதல் மாநிலமாக நெகிரி செம்பிலான் உருவெடுத்து, டிஜிட்டல் புரட்சியில் முன்னோடியாகத் திகழ்கிறது.

• ஸ்மார்ட் சிட்டி 2.0: தலைநகர் சிரம்பானை ஒரு நவீன 'ஸ்மார்ட் சிட்டி' ஆக மாற்றும் மாபெரும் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

• நெடுஞ்சாலை இணைப்புகள்: வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே போர்ட் டிக்சன் வழித்தடம் மற்றும் செனவாங்-KLIA இடையிலான புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மூலம் மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இது வணிகப் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, பயண நேரத்தையும் பெருமளவு குறைக்கும்.

மக்கள் நலத் திட்டங்களும் கல்வி மேம்பாடும் "மக்களுக்காவே அரசாங்கம்" என்ற கொள்கைக்கு இலக்கணமாகத் திகழ்கிறது தற்போதைய நெகிரி செம்பிலான் நிர்வாகம்.

• 95% வாக்குறுதிகள் நிறைவேற்றம் கடந்த 2023 மாநிலத் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட கூட்டு தேர்தல் அறிக்கையின் (Manifesto) 95% வாக்குறுதிகளை அமினுடின் அரசாங்கம் மிகக் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவேற்றி, மக்களின் நம்பிக்கைக்குரிய அரசாக மாறியுள்ளது.

• கல்விக்குக் கரம் கொடுக்கும் அரசு: கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பல்கலைக்கழகங்களில் முதலாம் நிலையில் தேர்ச்சி பெறும் நெகிரி செம்பிலான் மாநில மாணவர்களுக்கு தலா RM5,000 ரொக்கப் பரிசு மற்றும் உயர்கல்விக்கான பல்வேறு நிதியுதவிகளை மாநில அரசு தொடர்ந்து வாரி வழங்கி வருகிறது.

சமச்சீர் பிராந்திய பொருளாதார மேம்பாடு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது என்பதில் மந்திரி பெசார் உறுதியாக உள்ளார்.

• மலேசியா விஷன் வேலி 2.0 (MVV 2.0): இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ், சிரம்பான் மற்றும் போர்ட் டிக்சன் பகுதிகள் அதிநவீன தொழில்மயமாக்கல், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையங்களாக அதிவேக மேம்பாடு கண்டு வருகின்றன.

• அக்ரோபோலிஸ் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா : அதே வேளையில், ஜெம்போல், கோலா பிலா, தம்பின் மற்றும் ரெம்பாவ் ஆகிய உள்நாட்டுப் பகுதிகள் கைவிடப்படாமல், அவை விவசாயம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களாக மிக வலுவாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரமும் சமச்சீர் வளர்ச்சி கண்டுள்ளது.

சகாப்தத்தை நோக்கி......

டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூனின் நிலையான, நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆளுமை, நெகிரி செம்பிலான் மாநிலத்தை மலேசியாவின் அசைக்க முடியாத பொருளாதார சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது.

வெற்று முழக்கங்கள் இன்றி, திட்டமிட்ட உழைப்பின் மூலமும், துல்லியமான புள்ளி விவரங்களின் மூலமும் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் தடையின்றி வழிநடத்திச் செல்லும் மந்திரி பெசாரின் இந்தச் சாதனைகள், நெகிரி செம்பிலான் வரலாற்றில் என்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை!

Related News

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

தம்பின் மக்களின் நீண்டகால கனவு நனவானது: புக்கிட் ஜாலோர் மின் சுடலை கட்டுமானப் பணி துவக்கம்

தம்பின் மக்களின் நீண்டகால கனவு நனவானது: புக்கிட் ஜாலோர் மின் சுடலை கட்டுமானப் பணி துவக்கம்

மலேசியாவின் அடுத்த சிலிக்கான் வேலி: நெகிரி செம்பிலானின் 'எம்விவி 2.0' நவீன நகரப் புரட்சி

மலேசியாவின் அடுத்த சிலிக்கான் வேலி: நெகிரி செம்பிலானின் 'எம்விவி 2.0' நவீன நகரப் புரட்சி

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!