Nov 21, 2026
Thisaigal NewsYouTube

தேர்தல் பணிகளை வலுப்படுத்த மஇகா இளைஞர் பிரிவில் புதிய திட்டம் - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேர்தல் பணிகளை வலுப்படுத்த மஇகா இளைஞர் பிரிவில் புதிய திட்டம் - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தகவல்

மஇகா தேசிய இளைஞர் பிரிவின் 39-வது பேராளர் மாநாடு, கிள்ளானில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இம்மாநாட்டில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ அக்மால் சாலே கலந்து கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன், மஇகாவின் இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவுகளின் ஆண்டு பொதுக்கூட்டங்கள் தனித்தனியாக நடத்தப்படுவதற்குக் காரணம், அதிகமான உறுப்பினர்கள் பங்கேற்கவும் ஒவ்வொரு பிரிவினரும் தங்களது பலத்தை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிப்பதே காரணம் என்று தெரிவித்தார்.

மேலும், ஒரே அரங்கில் அனைத்து பிரிவுகளின் கூட்டங்களையும் நடத்தினால் இடவசதி மற்றும் பேசுவதற்கான நேரம் குறையும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், இளைஞர் பிரிவில் ஒவ்வொரு 14 உறுப்பினர்களுக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் இளம் நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த தேர்தலில் 54 விழுக்காடு இந்தியர்கள் பக்காத்ய்ஹான் ஹராப்பானுக்கு ஆதரவளித்திருந்த நிலையில், தற்போது இந்தியர்கள் அக்கூட்டணியைப் புறக்கணிப்பதாகக் கூறப்படும் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பேசுபவர்களை நாம் திருத்த முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், மஇகா என்ன செய்யவில்லை என்று விமர்சிப்பவர்கள், தாங்கள் செய்யத் தவறியதை முதலில் விளக்க வேண்டும் என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பாரிசான் நேஷனல் ஆட்சியை இழந்த பின்னர், இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தரப்பினரும், அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாகப் பொறுப்பில் இருப்பவர்களும் இந்தியச் சமூகத்திற்காக என்ன செய்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து

தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு

தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு