Oct 17, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 4 லட்சம் டாலர் மதிப்பிலான கிரீடம்
சிறப்பு செய்திகள்

மலேசியாவில் 4 லட்சம் டாலர் மதிப்பிலான கிரீடம்

Share:

பெண்கள் அதிகாரம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான மதிப்புமிக்க அனைத்துலக அழகு ராணிப் போட்டியான மிஸ் யுனிவேர்ல்ட், அதன் 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவேர்ல்ட் மிக அட்டகாசமாக தூள் கிளப்ப விருக்கிறது.

ஒய்யார நடை, முகப் பாவனை, கனக்கச்சிதமான உடல், கண்ணைப் பறிக்கும் ஆடை என புதிய பரிணாமத்தோடு பார்ப்பவற்களை சுண்டி இழுக்க வைக்கிறது.

இந்த அனைத்துலக அணங்குகளின் ஒய்யார நிகழ்விற்கு 'Queen Of Kilimanjaro' என பெயரிடப்பட்ட அதன் அதிகாரப்பூர்வ கிரீடத்துடன் போட்டி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மலேசியாவின் மாறுபட்ட கோணத்தில், ஒரு புதிய முன்னெடுப்பான இந்த அழகு ராணி போட்டியின் 'Queen Of Kilimanjaro' கிரீடத்தின் அறிமுக விழா கடந்த மே 29 ஆம் தேதி திங்கட்கிழமை, கோலாலம்பூர், ஸ்டார் ஹீல்ஸ் என்ற சொகுசு இன்னிசை விடுதில் நடைபெற்றது. நான்கு லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 'Queen Of Kilimanjaro' கிரீடத்தை, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரொஸ்லான் ரொஸ்டி வருகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

மிஸ் யுனிவேர்ல்ட் போட்டியின் தோற்றுநர் டத்தோ ரெய்ஸ் டியாரா, அமீயின் இயக்குநர் ரிச்சட் பிலிப்ஸ் மற்றும் 2022 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவேர்ல்ட் சாம்பியனான நாஷா ரஹ்பக்ஷ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பிரமிக்க வைக்கும் அற்புதங்களைக் கொண்ட கிளிமஞ்சாரோ சிகரத்தை நினைவுகூரும் வகையில் இந்த கிரீடத்திற்கு 'Queen Of Kilimanjaro' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ரிச்சட் பிலிப்ஸ் கூறுகிறார். மிஸ் யுனிவேர்ல்ட் உடனான கூட்டு ஒத்துழைப்பை பெற்றுள்ள அமீ பிலிப்ஸ் தலைமையில், தலைச்சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த கைவினைஞர்களால் இந்த கிரீடம் செறிவுடனும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மாதத் காலம் நீடித்த இந்த கிரீடத்தை உருவாக்கும் பணிகள் 50 வடிவமைப்பாளர்கள் திறனால் மேற்கொள்ளப்பட்டு மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு நீல நிறக் கற்களுடன் ஜொலிக்கின்றது. கிரீடத்தின் ஒவ்வொரு பகுதியும் மிக நுட்ப கலைத்திறனையும் வடிவமைப்பாளர்களின் நிபுணத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

420 கிராம் எடைக் கொண்ட இந்த 'Queen Of Kilimanjaro’ கிரீடம், 27 நீல நிற தான்சானைட் கற்கள், 562 வைரங்கள் மற்றும் 365.5 கிராம் எடையிலான வெண் தங்கம் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து பொறிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு ஈடு இணையற்ற ஓர் அவதாரத்தை பெற்றுள்ளது.

இந்த 'Queen Of Kilimanjaro’ கிரீடம் வலிமை, சுதந்திரம் மற்றும் பெண்களிடையே காணப்படும் அசைக்க முடியாத ஆதிகாரத்தையும் அவர்களுக்கே உரிய ஆளுமையை சித்தரிக்கிறது.

வியப்பையும் திகைப்பையும் ஒரு சேர பார்ப்பது போல் மிஸ் யூனிவேர்ட் கிரீடம், உண்மையான வைரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு வசீகர கவர்ச்சியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த அழகு ராணி போட்டிக்கு ஓர் அடையாளமாக அந்த கிரீடம் தனி மவுசை ஏற்படுத்துகிறது என்று துணிந்து கூறலாம்.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

மலேசியாவில் 4 லட்சம் டாலர் மதிப்பிலான கிரீடம் | Thisaigal News