Apr 27, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் மாவட்ட இந்தியர்களின் மத்தியில் குற்றச்செயல்கள் தலைத் தூக்கியுள்ளது
சிறப்பு செய்திகள்

கூலிம் மாவட்ட இந்தியர்களின் மத்தியில் குற்றச்செயல்கள் தலைத் தூக்கியுள்ளது

Share:

கூலிம், மார்ச்.29-

கூலிம் மாவட்ட இந்தியர்களின் மத்தியில் குற்றச்செயல்கள் தலை தூக்கியுள்ளதாக கூலிம் மாவட்ட இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் இந்தியர்களின் மத்தியில் போதைப்பொருள் குறிப்பாக 20 வயது முதல் 30 வயதுடைய இளைஞர்கள் போதைப்பித்தர்களாக மாறி வருவதாக கூலிம் மாவட்ட போதைப்பொருள் பிரிவின் தலைமை அதிகாரி ஏஎஸ்பி காந்தன் அண்ணாமலை குறிப்பிட்டார். இப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களின் பின்னனியை ஆராய்ந்துப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்புகள் இல்லாதது ஒரு காரணமாக இருப்பதாக அவர் கூறினார்.

நேற்று 218 வது போலீஸ் தினத்தை முன்னிட்டு கூலிம் மாவட்ட இந்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து லுனாஸ் வெல்லஸ்லி தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தில் ஏற்பாடு செய்த சிறப்புப் பிராத்தனையில் கலந்துக் கொண்ட ஏஎஸ்பி காந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் நண்பர்களின் ஆதிக்கத்தினாலும் பல இளைஞர்கள் போதைப் பொருளைப் பின்நோக்கிச் செல்வதாக காந்தன் கூறினார் .

அது மட்டுமின்றி, கூலிம் மாவட்ட மக்கள் பலர் "ஸ்கேம்" குற்றச்செயலினால் இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டினார் கூலிம் மாவட்ட வணிக குற்ற பிரிவின் தலைமை அதிகாரி ஏஎஸ்பி அன்பழகன். எனவே, பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வுடன் செயல்படுவத்தோடு தேவையற்ற அகப்பக்கங்கள், அறியாத தொலைபேசி அழைப்புகள், சமுக வளைத்தளங்களில் காணப்படும் விளம்பரங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது என்றார் . போலீஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புப் பிராத்தனையில் அவ்விரு அதிகாரிகளும் தகவல்களை நிருபர்களிடம் பகிர்ந்துக் கொண்டனர்.

கூலிம் மாவட்ட இந்திய காவல்துறையினர் பாயா பெசார் வட்டாரத்தில் அமைந்துள்ள வட மலேசிய காமாட்சி தொண்டூழியர் சங்கத்திலுள்ள குழந்தைகளைச் சந்தித்து அவர்களுக்கு சிறு நன்கொடை வழங்கியத்தோடு அக்குழந்தைகளுடன் சில தகவல் பரிமாற்றங்களும் செய்யப்பட்டத்தாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டனர் .

போலீஸ் தின சிறப்புப் பிரார்த்தனையில் கெடா மாநில தலைமை காவல் நிலையத்தின் பிரதிநிதியாக சுங்கை பட்டாணி கோலா மூடா காவல் நிலையத்தின் துணை தலைமை அதிகாரி சூப்ரிண்டென்டன் சரவணன் சண்முகம் வருகையளித்திருந்தார். அவருடன் இணைந்து கூலிம் லுனாஸ் காவல் நிலையத்தின் தலைவர் பல்பர் சிங் மற்றும் கூலிம் மாவட்ட போக்குவரத்து பிரிவின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் பூபாலன் என 250க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு