Jan 21, 2026
Thisaigal NewsYouTube
எரிந்து கொண்டிருந்த காரில் ஆடவரின் சடலம்
சிறப்பு செய்திகள்

எரிந்து கொண்டிருந்த காரில் ஆடவரின் சடலம்

Share:

பாகன் செராய், ஜூன் 10-

பாகன் செராய்- சீன இடுகாடு ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்த கார் ஒன்று, தீப்பற்றிக் கொண்டதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை அனைத்து காரை சோதனையிட்ட போது சடலம் ஒன்றை கண்டு பிடித்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் அந்த சீன இடுகாட்டின் ஒரு காலியான கட்டடத்தின் முன் நிகழ்ந்தது. இதில் புரோட்டான் ஈஸ்வரா- கார் கிட்டத்தட்ட 50 விழுக்காடு அழிந்ததாக பேரா மாநில தீயணைப்பு,மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

ஓட்டுநர் இருக்கையில் இறந்து கிடந்த அந்த நபர் ஆணா, பெண்ணா என்பது உடனடியாக தெரியவில்லை. விசாரணைக்கு ஏதுவாக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபரோட்ஸி நோர் அகமது குறிப்பிட்டார்.

Related News

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்