Oct 16, 2025
Thisaigal NewsYouTube
50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்
சிறப்பு செய்திகள்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

Share:

சிப்பாங், அக்டோபர்.14-

இந்த ஆண்டில் நாடு முழுவதும் 50 இந்திய கிராமங்களில் 87 உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் மொத்தம் 15 மில்லியன் ரிங்கிட்டை அங்கீகரித்துள்ளதாக அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் இன்று அறிவித்தார்.

சிலாங்கூர், சிப்பாங், டேவான் செர்பாகுனா பண்டார் பாரு சாலாக் திங்கி, பல நோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்ற தீபாவளி திருநாளையொட்டிய மடானி தீபாவளி நிகழ்வை தொடக்கி வைத்த போது அமைச்சர் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஒதுக்கீட்டில், இந்திய கிராமங்களில் உள்கட்டமைப்பு, பொது வசதிகள், சாலைகள், வடிகால்கள், சமூக அரங்குகள், பல்நோக்கு அரங்குகள் பழுது பார்த்தல், மேம்படுத்துதல் மற்றும் சூரிய விளக்குகள் நிறுவுதல் போன்ற மூன்று முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியிருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்திய கிராமங்களில் இயற்பியல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் முன்முயற்சியின் கீழ் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஆண்டு அறிவித்த 10 மில்லியன் ரிங்கிட்டும் அடங்கும் என்று ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் 2025, இன் கீழ் நான்கு கூடுதல் முயற்சிகளையும் பிரதமர் அறிவித்ததையும் ங்கா கோர் மிங் சுட்டிக் காட்டினார்.

இந்த முன்முயற்சிகள் மூலம் மேற்கண்ட நோக்கத்தை அமல்படுத்தும் ஏஜென்சி என்ற முறையில் சுமார் 5 மில்லியன் ரிங்கிட், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சினால் ஒருங்கிணைக்கப்படும் என ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப, இந்த முயற்சிகள் ஒவ்வொன்றையும் திறம்பட செயல்படுத்தவும், இந்தியச் சமூகத்தின் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தவும் மடானி அரசாங்கத்தின் வாயிலாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு நம்பிக்கை கொண்டு இருப்பதாக அமைச்சர் விளக்கினார்.

இன்றைய நிகழ்ச்சியில் வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு தீபாவளி விருந்து உபசரிப்புடன் கலாச்சார நிகழ்வும் படைக்கப்பட்டது.

Related News