கேமரன் மலை, அக்டோபர்.19-
கேமரன்மலை தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் ஹோ சீ யாங், 65 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கினார். தானா ராத்தா, கோல தெர்லா, பிரிஞ்சாங், ரிங்லெட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஹோ சீ யாங் தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கி, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
உதவிப் பொருட்கள் மட்டுமின்றி கேமரன்மலை மக்களிடையே கல்வி, சமூகவியல் மேம்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அவரின் தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டன. தீபத் திருநாளைக் கொண்டாடும் வசதி குறைந்த இந்திய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய பொருட்களை வழங்கி அவர்களை ஹோ சீ யாங் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
தவிர கேமரன்மலை பகுதியில் உள்ள எட்டு தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டிற்கு தலா 13 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டையும் ஹோ சீ யாங் வழங்கினார். ரிங்லெட், தானா ராத்தா, புளுவேலி, கோல தெர்லா, போ தோட்டம் 1, போ தோட்டம் 2, சும் யிப் லியோங், சுங்கை பாலாஸ் ஆகியவையே அந்த 8 தமிழ்ப்பள்ளிகளாகும்.