Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி, பொதுவில் மகத்தான் வரவேற்பு
சிறப்பு செய்திகள்

கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி, பொதுவில் மகத்தான் வரவேற்பு

Share:

நாட்டில் மிகப்பெரிய மொத்த வியாபார சந்தையாக திகழும் கிள்ளான் ஜிஎம் பேரங்காடியின் வர்த்தக சமூக செயலி, பொதுவில் அபரிமித ஆதரவை பெற்று வருகிறது.

கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி என்பது அந்த பேரங்காடியின் புத்தாக்க முயற்சிகளில் ஒன்றாகும். கிள்ளான் ஜிஎம் பேரங்காடி மொத்த வியாபார சந்தையுடன் தொழில் முனைவர்கள் மிக எளிதில் தொடர்பு கொண்டு வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி வாயிலாக நாடு முழுவதும் 8,000 க்கும் மேற்பட்ட பதிவேற்றம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த செயலியின் பிரதான பயனீட்டு அம்சங்கள் அதாவது பிஸ்னஸ் மேட்சிங் என்று அழைக்கப்படும் வர்த்தக பொருத்தம், ஆக்கமூட்டும் வகையில் மகத்தான ஆதரவை பெற்று வருகிறது.

கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி வாயிலாக அதன் மொத்த வியாபார சந்தைக்கும், தொழில் முனைவர்களுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலாக விளங்கி, இரு வழி வர்த்தகத்தை ஊக்குவிப்பதே கிள்ளான் ஜிஎம் பேரங்காடியின் பிரதான நோக்கமாகும்.

கிள்ளான் ஜிஎம் பேரங்காடி மையத்தின் பொருட்களுக்கான தொடர்புத்துறை முதிர் நிலை நிர்வாகி நொர்சுஹஐடா ஒத்மான் கூறுகையில், இவ்வாண்டு ஜுன் மாதம் வரை பிஸ்னஸ் மேட்சிங் என்ற வர்த்தக பொருத்தம் வாயிலாக மொத்த வியாபார தளத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் 150 க்கும் மேற்பட்ட தொழில்முனைவர்கள் சந்திப்புகள் வெற்றிகரமான நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலியின் பயன்பாட்டை சமுதாயம் ஏற்றக்கொண்டுள்ளது என்பதையே மேற்கண்ட எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுகிறது. மொத்த வியாபாரியும் பயனீட்டாளரும் தங்களுக்கான தொழில்முனைவர் வாய்ப்புகளில் மிக எளிதாகவும் துரிதமாகவும் ஊடுருவ முடிகிறது என்பதுடன் இந்த செயலி வாயிலாக தங்களின் விற்பனை பொருட்களை பிரபலப்படுத்த விரும்புகின்றவர்களுக்கு பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட ஸ்டூடியோவை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு வழங்குகிறது என்று நொர்சுஹஐடா ஒத்மான் குறிப்பிட்டார்.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்