Oct 15, 2026
Thisaigal NewsYouTube

Sunshine Educational Group உலக பள்ளி உச்ச மாநாட்டு விருதைப் பெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், ஜன.23-

கல்விக்குழுமமான Sunshine Educational Group, கடந்த 2024 ஆம் ஆண்டின் Best Preschool Chain எனும் சிறந்த பாலர் பள்ளி நிறுவனம் என்ற பிரிவின் கீழ் மதிப்புமிக்க World School Summit Award, உலக பள்ளி உச்ச மாநாட்டு விருதைப் பெற்றுள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க அங்கீகாரம் மலேசியாவின் HELP பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 23வது உலகப் பள்ளி உச்ச மாநாட்டின் போது இந்திய தொழில்முறை குத்துச்சண்டை வீரரும் அரசியல்வாதியுமான திரு. விஜேந்தர் சிங்கால் வழங்கப்பட்டது.

40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கல்வியாளர்கள், பள்ளி முதல்வர்கள், கல்விநிலையங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

உலகமயமாக்கல், கல்வி , புத்தாக்கம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை உலகெங்கிலும் உள்ள பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் பகிர்ந்து கொண்டனர். இது உண்மையிலேயே வளமான அனுபவமாக அமைந்தது எனக் குறிப்பிட்டார் Sunshine Educational Group கல்விக் குழுமத்தின் தோற்றுநரும் நிர்வாக இயக்குநருமான Dr. R. V.Shyam Prasad.

இந்த விருதைப் பெறுவது தங்கள் சன்ஷைன் குழுமத்தின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆர்வத்திற்கான சான்றாகும். இந்த சாதனையை தங்களின் ஆசிரியர்களுக்கும் இதர பணியாளர்களுக்கும் பெருமிதத்துடன் சமர்ப்பணம் செய்வதாக Dr. R. V.Shyam Prasad தெரிவித்தார்.

அவர்களின் அயராத முயற்சிகளும் சிறப்பிற்கான அர்ப்பணிப்பும் இந்தச் சாதனையை சாத்தியமாக்கியது. மேலும், தங்கள் மீது அசைக்க முடியாத ஆதரவையும் நம்பிக்கையையும் வைத்திருக்கும் தங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய மதிப்புமிக்க உலகளாவிய மேடையில் Sunshine கல்வி குழுமம் சாதனை படைத்து அங்கீகரிக்கப்படுவது ஒரு கௌரவமாக இருந்தது என்று Sunshine கல்விக்குழுமத்தின் இணை தோற்றுநரும் இயக்குநருமான Parameswari தெரிவித்தார்.

இந்த அபரிமித வளர்ச்சியின் மைல்கல், எதிர்காலத்திலும் இன்னும் உயர்ந்த இலக்குகளை அடையவும் பெரிய சாதனைகளைப் படைக்கவும் தங்களை ஊக்குவிக்கும் எனவும் பரமேஸ்வரி கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →