Sep 28, 2026
Thisaigal NewsYouTube
தேசியத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி
சிறப்பு செய்திகள்

தேசியத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி

Share:

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தொழிற்சங்கச் சட்டங்கள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான அறிவை வலுப்படுத்தும் வகையில், ஒரு நாள் தலைமைத்துவப் பயிற்சி நடத்தப்பட்டது.

நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலக் கிளைகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பயிற்சி, நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரம்பான் அரேனா மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் நெகிரி செம்பிலான் மாநிலக் கிளை சார்பில் 40 பேரும், மலாக்கா மாநிலக் கிளை சார்பில் 10 பேரும் கலந்து கொண்டனர்.

இந்தத் தலைமைத்துவப் பயிற்சியை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ G. சங்கரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலக் கிளையின் செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த ஒரு நாள் பயிற்சியில், சங்கப் பதிவு இலாகாவின் இயக்குநர் புவான் சித்தி கதிஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் அங்கத்தினர்கள் தொழிற்சங்கச் சட்ட விதிகள், தொழில் இலாகாவின் சட்ட விதிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் சட்ட விதிகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாக, நெகிரி செம்பிலான் மாநிலக் கிளையின் செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் தெரிவித்தார்.

மேலும், பயிற்சியில் கலந்து கொண்ட அங்கத்தினர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதித் திட்டம் குறித்து, தொழிற்சங்கத்தின் காப்புறுதிப் பொறுப்பாளர் காளிதாஸ் விளக்கம் அளித்தார்.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சிச் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

Related News