Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மருத்துவக் கருத்தரங்கம்
சிறப்பு செய்திகள்

பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மருத்துவக் கருத்தரங்கம்

Share:

மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் முதியோர் பராமரிப்பு குறித்த மருத்துவக் கருத்தரங்கம் எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெட்டாலிங் ஜெயா, பழைய கிள்ளான் சாலையில் உள்ள தோட்ட மாளிகையில் நடைபெறவிருக்கிறது.

மலேசிய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் என். ஞானபாஸ்கரன் மற்றும் அவர் தலைமையிலான குழுவினர் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஒரு நாள் மருத்துவக் கருத்தரங்கில் அவசரகால முதல் உதவியான சி.பி.ஆர் (CPR) மற்றும் உயிர் காக்கும் முதலுதவி பயிற்சிகள், சர்க்கரை நோய் புண் பராமரிப்பான நீரிழிவு நோய்க்கான காயங்களை நிர்வகித்தல் மற்றும் சமூக மனநல விழிப்புணர்வு, முதியோர் பராமரிப்பான ஆரோக்கியமான முதுமைக்கால வாழ்க்கை முறைகள், குடும்பத்தினருக்கான வழிகாட்டுதலாக முதியவர்கள் மற்றும் நோயாளிகளைப் பராமரிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் நேரடியாகப் பேசி ஆலோசனை பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.

நேற்று பெட்டாலிங் ஜெயா, லோட்டஸ் உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த மருத்துவக் கருத்தரங்கு குறித்து டாக்டர் ஞானபாஸ்கரன் விவரித்தார்.

டாக்டர் ஞானபாஸ்கரன், மூத்த மருத்துவ நிபுணர் டத்தோ டாக்டர் R.S. குமார், மலேசிய ஆரோக்கியமான முதுமை சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நாதன் வைத்தியலிங்கம், MATID (மாதிட்) தலைவர் துணைப் பேராசிரியர் டாக்டர் பாஸ்கரன் கோஸ்தி ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டு மருத்துவம் மற்றும் நோய்களை தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவர்.

காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை தேநீர் வழங்கப்படும். நபர் ஒருவருக்கு கட்டணம் 129 ரிங்கிட்டாகும். நிகழ்வில் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு டாக்டர் ஞானபாஸ்கரன் அழைக்கிறார்.

📞 பதிவு மற்றும் தொடர்புக்கு:

இடங்கள் குறைவாக உள்ளதால் உடனே பதிவு செய்து உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள்:

• பிரவீனா (Pravina): 012 781 0047

• ஷியாம்லி (Shyamlee): 012 605 0050

• இணையதளம்: www.buminetworkconsultancy.com

Related News