Oct 18, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு வருகை ஆண்டு 2026 ஐ முன்னிட்டு தேசிய மொக்டேல் உருவாக்கம்
சிறப்பு செய்திகள்

மலேசியாவிற்கு வருகை ஆண்டு 2026 ஐ முன்னிட்டு தேசிய மொக்டேல் உருவாக்கம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.30-

மலேசிய ஹோட்டல்கள் நடத்துநர்கள் சங்கமும் M.F.B.E.A எனப்படும் மலேசிய உணவு மற்றும் பான வகை சங்கத்தின் Mixology Alliance சகாவும் இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான மலேசியாவிற்கு வருகைத் தரும் ஆண்டை முன்னிட்டு Signature Visit Malaysia 2026 Mocktail Championship போட்டியை வெற்றிகரமாக நடத்துகின்றன.

மலேசியாவின் மிகச் சிறந்த தீர்க்கமான ஒரு பானவகை கலவையாக மொக்டேல் ஒன்றைக் கண்டுபிடித்து, அதற்கு வடிவம் கொடுத்து கொண்டாடுவதற்கு தேசிய அளவிலான இந்தப் போட்டியானது, நாட்டின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலைப் பிரதிபலிப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் மலேசியாவிற்கு வருகைத் தரும் ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இப்போட்டி நடத்தப்படுகிறது.

Zero proof drink வாழ்க்கை முறை போக்குகளை நோக்கிய உலகளாவிய நடவடிக்கைக்கு ஏற்ப மொக்டேல் பானம் தயாரிக்கும் கலை மூலம் படைப்பாற்றல், புதுமை மற்றும் உள்ளூர் பெருமையை மேம்படுத்தப்படுவதை இப்போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப்போட்டியின் அதிகாரப்பூர்வ அறிமுக மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை Imperial Lexis கோலாலம்பூரில் நடைபெற்றது.

இதில் Mixology Alliance of M.F.B.E.A – வின் தலைவர் பிரவீந்தரன் பாலகிருஷ்ணன், இப்போட்டிக்கு முதல் முறையாக தனது ஆதரவை தெரிவித்துள்ள யியோ’ஸ் மலேசியா நிறுவனத்தின் சந்தைப் பிரிவு இயக்குநர் ரெண்டா லோ, மலேசிய ஹோட்டல் நடத்துநர்கள் சங்கத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஐசெக் ராஜ், மலேசிய உணவு மற்றும் பான வகைச் சங்கத்தின் தலைவர் முகமட் ஹிஷாம் தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலேசியாவிற்கென்று தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய பான வகைக் கலவையான மொக்டேல் ஒன்றைக் கண்டுபிடிக்கும் இப்போட்டி, மலேசியர்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியானது, பங்கேற்பாளர்களின் நுட்பங்கள், திறமைகள் மற்றும் மொக்டேல் கலவையியல் நிபுணத்துவத்தை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

போட்டியாளர்கள் தங்கள் படைப்பாற்றல் மற்றும் தேர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு தனித்துவமான Signature மொக்டேலை வடிவமைக்க வேண்டும்.

முதல் சுற்று அறிமுக நிகழ்வு நேற்று நடைபெற்ற வேளையில் இறுதிச் சுற்றுப் போட்டி வரும் மே மாதம் 27 – 28 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மலேசிய ஹோட்டல் நடத்துநர்கள் சங்கத்தின் தலைமைத்துவ மாநாடு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி 2025 நடைபெறும் Vivatel கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Signature Visit Malaysia 2026 Mocktail Championship 2025 போட்டியானது மலேசியா முழுவதும் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் இருந்து 32 பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கிறது.

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வடிவமைத்த Signature Mocktail யிலை மதிப்பீடு செய்வதற்காக நடுவர்கள் குழுவிடம் வழங்குவார்கள்.

Related News

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி