Oct 14, 2026
Thisaigal NewsYouTube

எடிசன் அவார்ட்ஸ் டிக்கெட் விற்பனை துவக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பினாங்கு, பிப்.15-

17 ஆம் ஆண்டாக எடிசன் அவார்ட்ஸ் (Edison Awards) விருதளிப்பு விழா, வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி பினாங்கு, Spice Arena அரங்கில் மாலை 5 மணி அளவில் நடைபெவிருக்கிறது.

இந்த மாபெரும் விருதளிப்பு விழாவில், 2024 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட திரைப்படங்களின் நடிகர்கள், நடிகைகள், இயக்குநனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் உட்பட 33 பிரிவுகளில் திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படவிருக்கிறது என்று Edison Awards விருது குழுத் தலைவர் J. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்விற்கான நுழைவு கட்டணம் மலேசியா ரிங்கிட் 99, 199, 299 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளையில், Platinum Table 6,000 ரிங்கிட், Gold Table 5,000 ரிங்கிட், Silver Table 3,000 ரிங்கிட் என விற்கப்பட உள்ளது.

V.I.P. க்குரிய 6 பேர் கொண்ட ஒரு Dinner Table -லில் உணவு பரிமாறப்படும் என்று செல்வகுமார் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமாரும்,, MyTicket.Asia நிறுவனத்தின் தலைமை செயல்முறை Dirk Sass- சும் இரண்டு தினங்களுக்கு முன்பு கையெழுத்திட்டனர்.

இந்த மாபெரும் விருதளிப்பு விழாவிற்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் பிப்ரவரி 17 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது என்றார் Dirk Sass.

விருதளிப்பு விழாவிற்கான நுழைவு சீட்டை www.myticket.asia என்ற இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →