மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது அகவை நன்னாளை முன்னிட்டுச் சிறப்பு வாய்ந்த 'கருத்தாளர்! கருத்துரைக்கூட்டம், வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஷா ஆலாம், செக்ஷன் 17, டேவான் மேர்பாவ் எம்பிஎஸ்ஏ மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தேசியத் தலைவர் ‘எழுத்துலக வித்தகர்’ முனைவர் பெரு. அ. தமிழ்மணி அவர்களின் வழிகாட்டுதலில், இயக்கத் தேசியத் துணைத்தலைவர் சு. பரமசிவம் தலைமையுரையுடன் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இயக்கத் தலைமைச் செயலாளர் சி. மு. விந்தைக்குமரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரவேற்புரையாற்றுகிறார்.
இக்கருத்துரைக்கூட்டத்தில் சமூகச் சிந்தனையாளர்களும் சிறந்த கருத்தாளர்களுமான பின்வருவோர் சிறப்பு கருத்துரையாளராகக் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் சா. பாரதி, மாந்த நேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக. பஞ்சு, பேராக் பெரியார் பாசறை தலைவர் மு. மணிமாறன், பெரியார் கருஞ்சட்டைப்படை தலைவர் ச.நாகேந்திரன், இயக்கத்தின் தேசியத் துணைத் தலைமைச் செயலாளர் பெ. கோவிந்தசாமி ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
"சந்திப்போம்! சேர்ந்து சிந்திப்போம்!" எனும் தாரக மந்திரத்துடன் நடைபெறும் இக்கூட்டத்திற்குத் தமிழ் உணர்வாளர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.








