Jan 21, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்ட்ரோவின் ஹலோ தீபாவளி நிகழ்ச்சிகள்
சிறப்பு செய்திகள்

ஆஸ்ட்ரோவின் ஹலோ தீபாவளி நிகழ்ச்சிகள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 24-

‘கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம்’ என்ற உற்சாகமானக் கருப்பொருளுடன் இவ்வருடத் தீபாவளியை மிளிரச் செய்கிறது ஆஸ்ட்ரோ.

36 உள்ளூர் மற்றும் சர்வதேச முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், பாப்-அப் அலைவரிசை RUSI அலைவரிசை 210, அற்புதமானப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு மற்றும் பலவற்றுடன் தீபாவளியின் சிறந்ததை அனுபவிக்க தனது அன்பான வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தவிருக்கிறது ஆஸ்ட்ரோ.

உற்சாகமான ரொக்கப் பரிசுகளை வெல்லாம்; பிரத்தியேகத் தீபாவளி பணப் பாக்கெட்டுகளைப் பெறலாம் மற்றும் வாட்ஸ் அப் ஸ்டிக்கர்களைப் பதிவிறக்கம் செய்யலாம். அதுமட்டுமின்றி, அனைத்து மலேசியர்களும் ராகா வானொலியில் மேலும் பலத் தீபாவளி சிறப்புகளை எதிர்பார்ப்பதோடு, பல்வேறு இடங்களில் நடைபெறும் ஹலோ தீபாவளி நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் கூறுகையில், “பிரத்தியேகமாகத் தொகுக்கப்பட்ட பாப்-அப் அலைவரிசை முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டெலிமூவிகள், பல்வேறுநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேசப் பிளாக்பஸ்டர் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் வரைப் பல்வேறு வகையானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் வாடிக்கையாளர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை மிளிரச் செய்ய விருப்பதாக குறிப்பிடுகிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய தீபாவளி கொண்டாட்டம்; ரியாலிட்டி நிகழ்ச்சி, வா ராஜா வா; விளையாட்டு நிகழ்ச்சிகள், கதவைத் திற காசைப் பிடி மற்றும் பசங்க தீபாவளி; டெலிமூவிகள், படையப்பா ஊஞ்சல் மற்றும் நெக்லஸ்; உணவுப் பயண நிகழ்ச்சி, ரசிக்க ருசிக்க ரீலோடட் கலாட்டா தீபாவளி; சமையல் நிகழ்ச்சிச், செம்மையான சாப்பாடு - தீபாவளி ஸ்பெஷல் மற்றும் பல உள்ளூர் தமிழ் தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு, செம்மையான தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஆஸ்ட்ரோ அணிகலன் சேர்க்கிறது என்கிறார் பிரேம் ஆனந்த்.

Related News

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்