Oct 16, 2025
Thisaigal NewsYouTube
கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!
சிறப்பு செய்திகள்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

Share:

கூலிம், அக்டோபர்.14-

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இதுவரை காணவில்லை என்று கூலிம் பண்டார் பாரு மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர் சிவகுரு சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்டாயம் மூவின மக்களும் இருக்கும் சமயத்தில் அவர்களின் உணர்வுகளை மதிப்பதோடு அவர்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளை மதிப்பதுத்தான் மாநிலம் அரசாங்கத்தின் கடமையாகும் என்றார் சிவகுரு . மாநில அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நாடாளுமன்றம், சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்றார்.

கெடா மாநிலத்தில் சுங்கை பட்டணி, கூலிம் மற்றும் பாடாங் செராய் ஆகிய தொகுதிகளில் அதிக இந்திய மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவ்வட்டாரங்களில் தீபாவளிப் பண்டிகைகளுக்கு என்று ஓர் அலங்கரிப்பு இல்லாதது வேதனையாக இருப்பதாக சிவகுரு தெரிவித்தார். இவ்வாண்டு பாயா பெசார் வட்டாரத்தில் அங்குள்ள மக்களின் ஒத்துழைப்பால் சாலை முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு மாநிலமும், நாடாளுமன்றமும் சட்டமன்றமும் மானியம் வழங்கவில்லை என்பதுதான் உண்மையாகும்.

தொடர்ந்து , கெடா மாநிலத்திலுள்ள நாடாளுமன்றமும் சட்டமன்றமும் ஒரு சிறிய மானியத்தை வழங்கினால் சாலைகளில் தீபாவளி அலங்கரிப்புகள் செய்ய முடியும் என்றார். நம் அண்டை மாநிலமான பினாங்கு மாநிலத்தில் சாலை ஓரங்களில் தீபாவளி பண்டிகை விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு அம்மாநிலத்திலுள்ள இந்தியர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பத்தை உணர்த்துகிறது என்றார் சிவகுரு. இது போல் ஏன் கெடா மாநிலத்தில் செய்ய முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார் சிவகுரு.

நேற்று கூலிம் பண்டார் பாரு மக்கள் நீதிக் கட்சியின் 11 வது ஆண்டாக குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

Related News