Oct 24, 2025
Thisaigal NewsYouTube
ஒளி வெள்ளத்தில் பாரம்பரியத்தின் தன்மையைப் பிரதிபலிக்கச் செய்தது சன்வே லகூன்
சிறப்பு செய்திகள்

ஒளி வெள்ளத்தில் பாரம்பரியத்தின் தன்மையைப் பிரதிபலிக்கச் செய்தது சன்வே லகூன்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.23-

தீபாவளித் திருநாள் உற்சாகத்தில் இந்திய சமூகத்தினர் திளைத்து இருக்கும் வேளையில் நாட்டின் இரண்டு முன்னணி நீர் விளையாட்டு உல்லாசத் தளங்களான Sunway Lagoon மற்றும் ஈப்போவில் உள்ள Sunway Lost World Of Tampun, தீபாவளி ஒளி வெள்ளத்தில் மின்னின.

தீபாவளியையொட்டிய விடுமுறையில் ஆயிரக்கணக்கான மக்கள், இவ்விரு கேளிக்கை மையங்களுக்கும் வருகை தந்து, தீபத் திருநாளை சிறக்க வைத்துள்ளனர்.

மலேசியாவின் பண்டிகைகளில் தனித்துவமான சிறப்பைக் கொண்டுள்ள தீபாவளி தினத்தன்று, இந்தியர்கள் மட்டுமின்றி, பள்ளி விடுமுறையையொட்டி பல்லின சமூகத்தினரும் விடுமுறை நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டது, பன்முகக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கச் செய்தது.

அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நேற்று 22 ஆம் தேதி வரை உற்சாகமாக விடுமுறையில் திளைத்து இருந்தோம். போக்குவரத்து நெரிசல் இல்லை. மன உளைச்சல் இல்லை. மேல் அதிகாரிகளின் கெடுபிடியும் இல்லை. உண்மையில் இது இனிய தீபாவளி விடுமுறைதான் என்று பலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இவ்விரு சுற்றுலா தளங்களிலும் மலேசியர்கள் மட்டும் அல்ல, ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளும் பெரிய அளவில் திரண்டு இருந்தனர்.

தீபாவளியை வரவேற்று, இசை நிகழ்வுகள், பங்கரா நடனங்கள், பாடல்கள், ஒளி வெள்ளத்திற்கு மேலும் மெருகூட்டியது.

Related News