Oct 18, 2025
Thisaigal NewsYouTube
மஹிமாவின் புதிய தலைவராக டத்தோ சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்
சிறப்பு செய்திகள்

மஹிமாவின் புதிய தலைவராக டத்தோ சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 14-

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையாக - ஒரே குரலாக செயல்படுவது, ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வது, அவற்றின் நிர்வாகங்களை சந்திப்பது, இணைய அகப்பக்கம் ஒன்றை திறப்பது உட்பட ஆலயங்களின் ஒருங்கிணைப்பு பேரவையாக இளையோர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் மஹிமா செயல்படும் என்று அதன் புதிய தலைவர் டத்தோ N. சிவகுமார் தெரிவித்தார்.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவின் ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அதன் பொதுக்கூட்டம், டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கூட்டத்தில் இளையோர்களுக்கு வழிவிடும் வகையில் டான்ஸ்ரீ நடராஜா, தலைமைப் பதவிக்கு மீண்டும் போட்டியிடவில்லை. இந்நிலையில் மஇகாவின் தேசியப் பொருளாளராக டத்தோ சிவகுமார், மஹிமாவின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம், தாய்கோவிலாக விளங்கியப் போதிலும் அக்கோவிலையை மட்டும் மையமாக கொண்டு நாட்டில் உள்ள ஆலயங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை கண்டறிய முடியாது. தீர்வுக்காண இயலாது.

எனவேதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மஹிமா என்ற ஓர் அமைப்பு நிறுவப்பட்டு, அதன் வாயிலாக ஆலயங்கள் இணைக்கப்பட்டு, ஒரே குறிகோளுடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் மஹிமா தொடங்கப்பட்டதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

மஹிமாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோ சிவகுமார், செய்தியாளர்களிடம் பேசுகையில் நாடு முழுவதும் உள்ள ஆலயங்களை ஒன்றிணைக்கும் வகையில் மஹிமா பொறுப்பாளர்கள் Road Show போன்ற பயணத்தை தொடங்கவிருப்பதாக குறிப்பிட்டார்.

இப் பயணத்தின் போது ஆலய நிர்வாகிகளை சந்தித்து பேசுவதுடன் அங்கு உள்ள பிரச்சினைகளும் கண்டறியப்படும் என்று டத்தோ சிவகுமார் விவரித்தார்.

மஹிமாவின் இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய அங்கமாக புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.

Caption

டத்தோ N. சிவகுமார்,
மஹிமா புதியத் தலைவர்

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

மஹிமாவின் புதிய தலைவராக டத்தோ சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட... | Thisaigal News