Sep 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் புகழ்பெற்ற கார சாரம் கிலேபோட், சிங்கப்பூரில் புதிய கிளையைத் தொடங்குகிறது!
சிறப்பு செய்திகள்

மலேசியாவில் புகழ்பெற்ற கார சாரம் கிலேபோட், சிங்கப்பூரில் புதிய கிளையைத் தொடங்குகிறது!

Share:

மலேசியர்கள் மத்தியில் தனது தனித்துவமான சுவையால் மிகவும் புகழ்பெற்ற “கார சாரம் கிலேபோட்” உணவகம், தற்போது தனது புதிய கிளையை சிங்கப்பூரில் மிகப் பிரமாண்டமாகத் தொடங்க உள்ளது.

சிங்கப்பூரில் நாளை செப்டம்பர் 18-ஆம் தேதி, 79, டன்லோப் ஸ்டிரிட் என்ற முகவரியில் மதியம் 12 மணிக்கு “கார சாரம் கிலேபோட்” உணவகத்தின் பிரம்மாண்ட திறப்பு நடைபெறவுள்ளது.

இந்த பிரமாண்ட திறப்பு விழாவை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா கட்சியின் தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் எம். சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.

மலேசியாவில் பல்லின மக்களாலும் மிகவும் விரும்பி சுவைக்கப்படும் கார சாரத்தின் தனித்துவமான உணவுகளும் அதன் தரமும், தற்போது அண்டை நாடான சிங்கப்பூரிலும் சிறகு விரித்துள்ளது.

இந்த பிரமாண்ட தொடக்க விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கார சாரம் கிலேபோட் நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

Related News