Nov 23, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளியை முன்னிட்டு பினாங்கில் ஜசெக மற்றும் பிறை சட்டமன்றத் தொகுதி சார்பில் திறந்த இல்ல உபசரிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளியை முன்னிட்டு பினாங்கில் ஜசெக மற்றும் பிறை சட்டமன்றத் தொகுதி சார்பில் திறந்த இல்ல உபசரிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பினாங்கு மாநில ஜசெக மற்றும் பிறை சட்டமன்றத் தொகுதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

நேற்று மதியம் 12 மணியளவில் பிறை வட்டாரத்தில் அமைந்துள்ள செர்பகுணா மண்டபத்தில் தொடங்கிய இந்நிகழ்வில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விருந்தினர்களுக்கு உணவு மற்றும் சிறப்பு உபசரிப்புகள் வழங்கப்பட்டதுடன், சமூகங்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்நிகழ்வு அமைந்தது.

இதனைப் பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

தீபாவளி என்பது இருளை ஒளி வெல்லும் நன்னாளைக் கொண்டாடுவதுடன், அன்பு, சகோதரத்துவம், பகிர்வு மற்றும் ஒற்றுமை ஆகிய உயரிய பண்புகளை எடுத்துரைக்கும் பண்டிகையாகவும் விளங்குகிறது. இத்தகைய திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வுகள் பல்வேறு இன மக்களை ஒன்றிணைத்து, நாட்டின் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துகின்றன என்றார்.

இந்நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு அமைச்சரும், ஜசெக துணைச் செயலாளருமான ஸ்டீவன் சிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அவர்களுடன் பல்வேறு பிரமுகர்களும் பொதுமக்களும் திரளாக வருகை தந்து நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தினர்.

நிகழ்ச்சியின் இறுதியில், திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் தீபாவளி அன்பளிப்பாக 'அங் பாவ்' வழங்கினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அன்பளிப்பைப் பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
பத்துமலையில் முப்பெரும் விழா கோலாகலம்! தமிழர் வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் ‘கடாரம் கொண்டான்’

பத்துமலையில் முப்பெரும் விழா கோலாகலம்! தமிழர் வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் ‘கடாரம் கொண்டான்’

தேர்தல் பணிகளை வலுப்படுத்த மஇகா இளைஞர் பிரிவில் புதிய திட்டம் - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தகவல்

தேர்தல் பணிகளை வலுப்படுத்த மஇகா இளைஞர் பிரிவில் புதிய திட்டம் - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தகவல்

ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து

தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

தீபாவளியை முன்னிட்டு பினாங்கில் ஜசெக மற்றும் பிறை சட்டமன்... | Thisaigal News