Nov 23, 2026
Thisaigal NewsYouTube

பத்துமலையில் முப்பெரும் விழா கோலாகலம்! தமிழர் வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் ‘கடாரம் கொண்டான்’

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பத்துமலையில் முப்பெரும் விழா கோலாகலம்! தமிழர் வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் ‘கடாரம் கொண்டான்’

பத்துமலைத் திருத்தலத்தில் ஆன்மிகம், தமிழ் இலக்கியம், வரலாறு, கலை, அறிவுசார் வளர்ச்சி எனப் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து முப்பெரும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில், தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கடாரம் கொண்டான்’ நூல் வெளியீடு, திருக்குறள் கணினிப் பெட்டகத் திறப்பு, நவீன நூலகத் திறப்பு என மூன்று முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றன.

“கடாரன் கொண்டான்” நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரையாற்றிய மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், மலேசியத் தமிழர்களின் வரலாறு என்பது கடந்த 200 ஆண்டுகளுடன் முடிந்துவிடுவதில்லை; அதற்கும் முற்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழர் வரலாற்றையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்தவர் மூத்த பத்திரிகையாளர் பெரு. அ. தமிழ்மணி என்று குறிப்பிட்டார்.

மலேசியத் தமிழர்களின் வரலாற்றை 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழர் வரலாற்றுப் பின்னணியிலும் ஆராய்ந்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்ததாகக் குறிப்பிட்ட டத்தோ ஸ்ரீ எம். சரவணன், அந்த ஆலோசனையைத் தாம் கருத்தில் கொண்டிருந்த வேளையில், டான் ஸ்ரீ ஆர். நடராஜா தம்மைத் தொடர்பு கொண்டு ‘கடாரம் கொண்டான்’ என்ற நூல் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறினார்.

தொடர்ந்து தமது உரையல், டான்ஸ்ரீ நடராஜாவின் தலைமைத்துவத்தையும், பத்துமலைத் திருத்தலத்தில் தமிழ்ப்பணிகளையும் டத்தோ ஸ்ரீ சரவணன் வெகுவாகப் பாராட்டினார். பத்துமலையில் திருமுறை, பிரபந்த மாநாடுகள் உள்ளிட்ட இலக்கியச் சமய நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் டான் ஸ்ரீ நடராஜாவின் முயற்சிகளையும், ஆயிரக்கணக்கானோர் அமரக்கூடிய பிரம்மாண்ட மண்டபம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற அவரது கனவையும் சுட்டிக் காட்டினார். அதோடு, பத்துமலையில் அவர் உருவாக்கியுள்ள பிரம்மாண்ட திருமுருகன் சிலை உள்ளிட்ட சாதனைகள் அவரது பெயரை வரலாற்றில் நிலைநிறுத்தும் என்றும் புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்வில் டத்தோ ஸ்ரீ சரவணன், கடாரம் கொண்டான் முதல் நூலை பத்தாயிரம் ரிங்கிட் வழங்கி, டான் ஸ்ரீ நடராஜாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

முன்னதாக பத்துமலைத் திருத்தலத்தின் நூலகத் திறப்பு விழா, டான் ஸ்ரீ நடராஜா, டத்தோ ஸ்ரீ சரவணன் மற்றும் அறங்காவலர் டத்தோ ந. சிவகுமார் முன்னிலையில் மிக பிரமாண்டபமாக நடைபெற்றது.

டான் ஸ்ரீ நடராஜாவுடன் இணைந்து புவான் ஸ்ரீ டத்தின் மல்லிகா மற்றும் அறங்காவலர் டத்தோ சிவகுமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி நூலகத்தை திறந்து வைத்தனர்.

இரண்டு தளங்களைக் கொண்ட இந்த நவீன நூலகம் தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான முக்கிய முன்னெடுப்பாக அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ள இந்நூலகம், ஆன்மிகத் தலமாக விளங்கும் பத்துமலையை, தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கான மையமாகவும் உருவாக்க வேண்டும் என்பதே இத்தகைய முயற்சிகளின் அடிப்படை நோக்கம் என்று தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

இதனிடையே, திருக்குறளின் பெருமையை நவீனத் தொழில்நுட்பத்தின் வழியாக அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் அமைக்கப்பட்ட திருக்குறள் கணினிப் பெட்டகத்தை தேவஸ்தான அறங்காவலரும் மராமத்துப் பகுதிப் பொறுப்பாளருமான டத்தோ ந. சிவகுமார் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

காலை முதலே மேளதாள நாதஸ்வர இசை, பின்னணிப் பாடகர் செந்தில்தாஸ் மற்றும் பிரவின் வயலின் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, புலவர் மா. இராமலிங்கம் தலைமையிலான பட்டிமன்றம், நாட்டியாஞ்சலி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

மொத்தத்தில், தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் நூல் வெளியீடு, திருக்குறளைத் தொழில்நுட்பத்தின் வழியாகப் பரப்பும் முயற்சி, தமிழ் வாசிப்புப் பண்பாட்டை வளர்க்கும் நவீன நூலகம் என மூன்று முக்கிய முன்னெடுப்புகள் ஒரே மேடையில் அரங்கேறியிருப்பது, மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் பத்துமலையின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
தேர்தல் பணிகளை வலுப்படுத்த மஇகா இளைஞர் பிரிவில் புதிய திட்டம் - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தகவல்

தேர்தல் பணிகளை வலுப்படுத்த மஇகா இளைஞர் பிரிவில் புதிய திட்டம் - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தகவல்

ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து

தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!