Sep 11, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் நாளை எட்டாவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி
ஆன்மிகம்

கெடாவில் நாளை எட்டாவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி

Share:

கெடா மாநிலம், சுங்கை பட்டாணியில் நாளை, செப்டம்பர் 12-ஆம் தேதி சனிக்கிழமை, எட்டாவது மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மலேசிய சிவனடியார் திருச்சபை, மலேசிய நால்வர் மன்றம், கெடா மாநில நால்வர் மன்றம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை, திருவாசகம் முழுவதும் பக்தர்களால் ஒன்றிணைந்து ஓதப்பட உள்ளது.

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 658 பாடல்களைக் கொண்ட திருவாசகம் எனும் ஞானப் பணுவலை ஒன்றிணைந்து ஓதும் இந்த அரிய வாய்ப்பில், சுற்றுவட்டார பொதுமக்கள், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் திருவருளையும் குருவருளையும் பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படவுள்ளது.

நிகழ்ச்சி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு திரையில் காணும் எண்களைத் தொடர்பு கொள்க.

திருமதி தியாகேஸ்வரி – 012-557 1627

திருமதி மாணி – 012-307 3565

திருமதி பரிமளா தேவி – 013-453 4775

Related News