இந்தியாவில் நடைபெற்றும் வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தன.
நாளைமறுதினம் (19-ந்தேதி) குஜராத் மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியில் 4-வது வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடைசி லீக் ஆட்டத்தில் சதம், அரையிறுதியில் சதம் என அசத்தியுள்ளார்.
இறுதிப் போட்டி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ''நான் மும்பை வான்கடே மைதானத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நண்பர்களுடன் சென்று நேரில் பார்த்து ரசித்தேன்.
அப்போது என் நண்பர்களிடம் நானும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று கூறினேன். தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விலையாட இருக்கிறேன்.
இதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பெருமை'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.