Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தேசிய ஹாக்கி ஜாம்பவான் ஆர். ராமகிருஷ்ணன் காலமானார்
விளையாட்டு

தேசிய ஹாக்கி ஜாம்பவான் ஆர். ராமகிருஷ்ணன் காலமானார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.28-

மலேசிய ஹாக்கி உலகின் மிகச் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரான ஆர். ராமகிருஷ்ணன் இன்று டாமான்சாராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 72. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ராமகிருஷ்ணன் மறைவு குறித்து முன்னாள் பயிற்சியாளர் Stephen Van Huizen மற்றும் விளையாட்டு உலகம் தெரிவித்துள்ள இரங்கல் செய்திகளில், ராமகிருஷ்ணன் 1978-ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசிய அணியின் கேப்டன் ஆக வழிநடத்தினார். மேலும், 1972 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரியவர்.

மூன்று உலகக் கிண்ண தொடர்களான 1973, 1975, 1978, இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நான்கு சீ (SEA) விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதிதித்துள்ளார். ராமகிருஷ்ணன் திறமையைப் பாராட்டி 'Asian All-Star' அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.

ராமகிருஷ்ணன் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல, மிகவும் அடக்கமான மற்றும் மென்மையான குணம் கொண்டவர். ஓய்வுக்குப் பிறகும் இளம் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதில் பெரும் பங்காற்றினார் என Stephen Van Huizen புகழாரம் சூட்டியுள்ளார்.

Related News

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட்-மேன் சிட்டி மற்றும் பிஎஸ்ஜி-செலிசி மோதும் அதிரடி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட்-மேன் சிட்டி மற்றும் பிஎஸ்ஜி-செலிசி மோதும் அதிரடி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஜப்பானில் முதல்முறையாக ‘பேடல்’ விளையாட்டு அறிமுகம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஜப்பானில் முதல்முறையாக ‘பேடல்’ விளையாட்டு அறிமுகம்

தேசிய காற்பந்து சர்ச்சை: என்னை பலிகடாவாக்க உள்ளிருப்பவர்கள் முயற்சி - ஜோகூர் இளவரசர் TMJ பகிரங்க குற்றச்சாட்டு

தேசிய காற்பந்து சர்ச்சை: என்னை பலிகடாவாக்க உள்ளிருப்பவர்கள் முயற்சி - ஜோகூர் இளவரசர் TMJ பகிரங்க குற்றச்சாட்டு

மிலானோ-கோர்டினா பாராலிம்பிக்: கனடா அணி பதக்க வேட்டை

மிலானோ-கோர்டினா பாராலிம்பிக்: கனடா அணி பதக்க வேட்டை

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: 19 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பியர்லி - தீனா ஜோடி அரையிறுதியுடன் வெளியேற்றம்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: 19 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பியர்லி - தீனா ஜோடி அரையிறுதியுடன் வெளியேற்றம்

2026 ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி: 'ஸ்பீடி டைகர்ஸ்' அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டு

2026 ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி: 'ஸ்பீடி டைகர்ஸ்' அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டு