Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ரோட் டு கோல்ட் திட்ட அணுகுமுறையை எம்பிஎம் மற்றும் எம்ஓஎம் பின்பற்ற வேண்டும்
விளையாட்டு

ரோட் டு கோல்ட் திட்ட அணுகுமுறையை எம்பிஎம் மற்றும் எம்ஓஎம் பின்பற்ற வேண்டும்

Share:

பாங்கி, செப்டம்பர்.20-

விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கான நிதி ஆதரவு மற்றும் வெகுமதிகளை முறையாக நிர்வகிப்பதில் ரோட் டு கோல்ட் திட்ட அணுகுமுறைகளை மலேசிய பாராலிம்பிக் மன்றமும் மலேசிய ஒலிம்பிக் மன்றமும் பின்பற்ற வேண்டும். இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு அவ்வாறு பரிந்துரைத்துள்ளது.

அதன் வழி பல பிரச்னைகளும் சிக்கல்களும் தோன்றுவதைத் தடுக்க முடியும். விளையாட்டாளர்களுக்கு வழங்குவதாக ஆதரவாளர்களின் அனைத்து வெகுமதிகளும் போட்டிகள் தொடங்கும் முன்பே அதிகாரப்பூர்வ ஒப்பந்த அடிப்படையில் கையொப்பமிடப்படுவதை உறுதிச் செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்தார்.

Related News