Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பிரீமியர் லீக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்படுகிறது: புகைப்படம் எடுத்துக் கொள்ள அழைப்பு
விளையாட்டு

பிரீமியர் லீக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்படுகிறது: புகைப்படம் எடுத்துக் கொள்ள அழைப்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-

கின்னஸ் நிறுவனம் ஏற்பாட்டில் உலக நாடுகள் பயணத்தில் ஒரு பகுதியாக பிரிமியர் லீக் கால்பந்து கோப்பை மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற பிரீமியர் லீக் கோப்பை இன்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கி, வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கோலாலம்பூர் பெவிலியன் கேஎல்லில் காட்சிக்கு வைக்கப்படும். கால்பந்தாட்ட ரசிகர்கள் பிரீமியர் லீக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

தங்களுக்குப் பிடித்த கால்பந்து ஜெர்சியை அணிந்து வரும் ரசிகர்கள் கோப்பையுடன் புகைப்படும் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி இலவச கின்னஸ் பானத்தை மீட்டெடுக்கலாம். இது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளது. இந்த கின்னஸ் நிகழ்வுக்கு முஸ்லிம் அல்லாத 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்த கின்னஸ் விழாவில் நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, இந்த நிகழ்வு நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதே முக்கியம் என்கிறார் கின்னஸ் மலேசியாவின் சந்தைப் பிரிவு மேலாளர் ஜோய்ஸ் லிம்.

கின்னஸ் எப்போதும் ஒற்றுமை உணர்விற்கு முன் நிற்கிறது. இன்று, விளையாட்டை உயிர்ப்பிக்கும் ரசிகர்களை நாங்கள் கௌரவிக்கிறோம் என்று ஜோய்ஸ் லிம் தெரிவித்தார்.

Related News