Jan 11, 2026
Thisaigal NewsYouTube
இங்கிலிஷ் ஃஎப்ஏ கிண்ணம்: செல்சி வெற்றி
விளையாட்டு

இங்கிலிஷ் ஃஎப்ஏ கிண்ணம்: செல்சி வெற்றி

Share:

லண்டன், ஜனவரி.11-

இங்கிலிஷ் ஃஎப்ஏ கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டத்தில் செல்சி, சார்ல்ட்டன் அணியை 5-1 என்ற கோல்களில் வீழ்த்தியது. புதிய நிர்வாகி லியாம் ரொசெனியொர் தலைமையில் இந்த வெற்றியானது, அவ்வணிக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

முற்பாதி ஆட்டம் 1-0 என செல்சிக்கு சாதகமாக அமைந்தது. அவ்வணியின் மேலும் 4 கோல்கள் பிற்பாதியில் போடப்பட்டன. கடந்த வாரம் என்சோ மரெஸ்கா நிர்வாகி பொறுப்பை காலி செய்ததை அடுத்து, அவ்விடத்திற்கு ரொசெனியொர் கொண்டு வரப்பட்டார். அவரது வருகை செல்சிக்கு ஏற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News