Oct 18, 2025
Thisaigal NewsYouTube
தேசிய மகளிர் ஹாக்கி அணியின் எண்ணம் ஈடேறவில்லை
விளையாட்டு

தேசிய மகளிர் ஹாக்கி அணியின் எண்ணம் ஈடேறவில்லை

Share:

வால்க்ஸ், ஜூன்.18-

ஃஎப்ஐஎச் நேஷன்ஸ் கிண்ண ஹாக்கி போட்டியின் மகளிர் பிரிவில் அரைறுதிக்கு முன்னேறும் தேசிய மகளிர் அணியின் கனவு கலைந்தது. போலந்தில் நடைபெறும் அப்போட்டியில் மலேசியா 1-3 என தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. அதனை அடுத்து அது அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பறி கொடுத்தது.

A பிரிவில் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோல்வியுற்ற மலேசியா பட்டியலில் இறுதியிடத்தில் இடம் பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழையத் தவறியது. சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கிய மலேசியா 11 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டது. எனினும் அதன் பிறகு அது அந்த உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறியது.

அரையிறுதிக்கு முன்னேறாவிட்டாலும், குழு நிலையிலான கடைசிப் போட்டியில் மலேசியா உருகுவேக்கு கடும் சவாலை வழங்கும் என தேசிய தலைமை பயிற்ருநர் தெரிவித்தார். A குழுவில் போலந்து முதலிடத்தில் இருக்கிறது. உருகுவேயும் தென் ஆப்பிரிக்காவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Related News