கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவ் தலைமையில் நடைபெற்ற மலேசிய விளையாட்டு உச்ச மன்றக் குழுக் கூட்டம், அடுத்த ஆண்டு சிலாங்கூரில் நடைபெறவுள்ள 2026 சுக்மா போட்டியை ஏற்பாடு செய்வது தொடர்பான பல முக்கிய முடிவுகளை இறுதிச் செய்தது.
முக்கிய முடிவுகளில் குத்துச்சண்டை மற்றும் சாப்ட்பால் ஆகிய இரண்டு விளையாட்டுகளைச் சேர்ப்பது அடங்கும். இதன் மூலம் இந்த ஆண்டு விளையாட்டுகளில் மொத்தம் 30 விளையாட்டுகள் பங்கேற்கக் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
சதுரங்கம், மின் விளையாட்டு, கிரிக்கெட் மற்றும் கபடி என நான்கு கூடுதல் விளையாட்டுகளும் அங்கீகரிக்கப்பட்டன. இதனால் மொத்த விளையாட்டுகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு இறுதியானது, மேலும் கூடுதல் விளையாட்டுகளுக்கான மேல்முறையீடுகள் எதுவும் பரிசீலிக்கப்படாது, இதனால் மாநிலம் முழுவதும் (சிலாங்கூர்) ஒன்பது மாவட்டங்களில் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் விளையாட்டுகளுக்கு முன்னதாக முழுமையான தயாரிப்புகளைச் செய்ய ஏற்பாட்டாளர்களுக்கு போதுமான நேரம் இருப்பதை உறுதிச் செய்யும் என தேசிய விளையாட்டு மன்றம் (MSN) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வேளையில் இம்முறை சுக்மா போட்டியில் புருணையும் கலந்து கொள்ளவிருக்கிறது.