Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சென் டாங் ஜீ-ஈ வெய் தோல்வி
விளையாட்டு

சென் டாங் ஜீ-ஈ வெய் தோல்வி

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-

மக்காவ் பொது பூப்பந்து போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதியாட்டத்தில் சக நாட்டவருடன் மோத வேண்டும் என்ற நாட்டின் முன்னணி ஜோடியான சென் டாங் ஜீ-டோ ஈ வெயின் கனவு சிதைந்தது. அவர்கள் அரையிறுதியில் மூன்று செட்களில் டென்மார்க் ஜோடியான மத்தியாஸ் கிறிஸ்டியன்சென்-அலெக்ஸாண்ட்ரா போஜேவிடம் தோல்வியுற்றனர்.

முதல் செட்டில் சிறப்பாக ஆதிக்கம் செலுத்திய டாங் ஜீ-ஈ வெய், இரண்டாவது செட்டில் வேகத்தைத் தக்க வைக்கத் தவறினர். மூன்றாவது செட்டில் ஈடு கொடுக்க முடியாத நிலையில், கிறிஸ்டியன்சென்-போஜே வெற்றி பெற்றனர். அத்தோல்வியின் மூலம், டாங் ஜீ-ஈ வெய் இப்பருவத்தில் முதல் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.

நாளை இறுதியாட்டத்தில் கிறிஸ்டியன்சன்-போஜே, நாட்டின் மற்றொரு கலப்பு இரட்டையர் ஜோடியான ஜிம்மி வோங்-லாய் பெய் ஜிங்கை எதிர்கொள்வார்கள். முன்னதாக அந்த மலேசிய இணை இந்தோனேசிய விளையாட்டாளர்களை வீழ்த்தினர்.

Related News

சென் டாங் ஜீ-ஈ வெய் தோல்வி | Thisaigal News