இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 1998ஆம் ஆண்டுமுதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
முதல் முதலில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அடுத்து இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில், மகேந்திரசிங் தோனி கிரிக்கெட்டுக்கு செய்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.