ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி தனது 6-வது லீக் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து நாளை விளையாட இருக்கிறது.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
2023-24 சீசனில் தமிழ்நாடு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தமிழ்நாடு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.