ரியால் மாட்ரிட், டிசம்பர்.05-
ரியால் மாட்ரிட் கோல் மன்னன் கிளியன் எம்பாப்பே, அவ்வணியின் முன்னாள் நட்சத்திரம் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை முறியடிக்க இலக்கு வைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நெடுகிலும் ரொனால்டோ ரியாலுக்காக மொத்தம் 59 கோல்களைப் போட்டார். அதனை முறியடிக்க எம்பாப்பே எண்ணம் கொண்டுள்ளார்.
அவர் இதுவரை 55 கோல்களை அடித்துள்ளார். இவ்வாண்டு இறுதிக்குள் இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அவ்வாட்டங்களில் கோல்களைப் புகுத்தி ரொனால்டோவின் சாதனையை முறியடிக்க எம்பாப்பேவுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
எம்பாப்பே கடந்தாண்டு பிஎஸ்ஜியில் இருந்து ரியால் மாட்ரிட்டுக்கு மாறிச் சென்றார். இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்தே எம்பாப்பே ரியாலில் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்கி வருகிறார்.








