இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
குறிப்பாக 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 8-வது முறையாக தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்றது.
இதனையடுத்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக அறிவிக்கப்பட்டார்.