Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சர்வதேச கிரிக்கெட் சம்மேளன வருடாந்த மாநாடு இலங்கையில்
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் சம்மேளன வருடாந்த மாநாடு இலங்கையில்

Share:

ஸ்ரீ லங்கா, ஜூலை 16-

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை 2024 ஜூலை 19 முதல் 22 வரை இலங்கையில் நடத்தவுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் முதன்முறையாக இந்த நிகழ்வு இலங்கையில் இடம்பெறவுள்ளது.

இந்த கிரிக்கெட் மாநாட்டில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களை உள்ளடக்கிய, உலகம் முழுவதும் உள்ள, சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 108 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு மாநாட்டில், "ஒலிம்பிக் வாய்ப்பை மூலதனமாக்குதல்;' உட்பட்ட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்படவுள்ளன.இந்த வருடாந்த மாநாட்டில் முக்கிய கூட்டங்கள், பட்டறைகள் மற்றும்; விளையாட்டின் எதிர்கால நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News