கோலாலம்பூர், செப்டம்பர்.14-
மலேசியாவின் ஸ்குவாஷ் நட்சத்திரம், எஸ். சிவசங்கரி, எகிப்தில் நடந்து வரும் உலக ஸ்குவாஷ் போட்டியில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். உலகின் எட்டாவது இடத்திலுள்ள சங்கரி, இரண்டாவது சுற்றில் எகிப்து வீராங்கனை நூர் ஹெய்க்காலை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்த சுற்றில் இங்கிலாந்தின் ஜாஸ்மீன் ஹட்டனை எதிர்கொள்ள உள்ள சங்கரி, நிச்சயம் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என அவரது பயிற்சியாளர் ஷாஹிட் ஷாஹிடான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








