ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியிலும், 2-வது போட்டி 24-ம் தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ம் தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் மொகாலியில் இன்று நடைபெற உள்ளது.
முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார்.
பேட்டிங்கில் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.
இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.