பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற
ஆஸ்திரேலியா 1 - 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் 14-ம் தேதி துவங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலியா 478 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்களும், மிட்சேல் மார்ஷ் 90 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அமீர் ஜமால் 6 விக்கெட்களை சாய்த்தார்.