செங்டு, ஆகஸ்ட்.12-
சீனா, செங்டுவில் நடைபெற்ற உலக விளையாட்டுப் போட்டியின் வூஷூ பிரிவில் நாட்டின் டான் சியோங் மின் மலேசியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அப்போட்டியில் அவர் முதல் முறையாகப் பங்கேற்றார்.
அது தமக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்றும் இம்மாத தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு இந்த வெற்றி அர்த்தம் சேர்த்துள்ளது என்றும் சியோங் மின் குறிப்பிட்டார். தமது வெற்றி சக வீரர், வீராங்கனைகளுக்கு உந்துதலாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அப்போட்டியில் மலேசியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பெற்றது. சியோங் மின் அடுத்த மாதம் பிரேசிலில் நடைபெறும் உலக வூஷூ வெற்றியாளர் போட்டியில் களமிறங்குகிறார். அவர் தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிக்கும் தயாராகி வருகிறார்.