Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இராணுத்தினரால் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் குருநகர் அணி சாதனை
விளையாட்டு

இராணுத்தினரால் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் குருநகர் அணி சாதனை

Share:

இலங்கை, ஜூலை 17-

யாழ். 51 வது காலால் படை இராணுத்தினரால் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் குருநகர் சென்.றொக்ஸ் கழகம் முதலாம் இடத்தை தனதாக்கியுள்ளது.

14 வயது பிரிவுக்குற்பட்டோருக்கான குறித்த போட்டியில் 16 கழகங்கள் பங்குபற்றியுள்ளன.

குறித்த போட்டியில் குருநகர் சென்.றொக்ஸ் கழகம் முதலாம் இடத்தையும், கிளிநொச்சி ஈக்கிள் ஸ்டார் கழகம், இரண்டாமிடத்தையும் உரும்பிராய் உதைபந்தாட்ட கழகம், மூன்றாமிடத்தையும் பாசையூர் சென்.அன்ரனீஸ் கழகம் நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

ஆட்ட நாயகன்

14 வயது பிரிவுக்குற்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டியின் ஆட்ட நாயகனாக 20 கோல்களை பெற்றுக்கொடுத்த ஸ்டார் ஈக்கிள் கழக வீரர் யதுசன் தெரிவுசெய்யப்பட்டார்.

மற்றும் சிறந்த கோல் காப்பாளர் தொடராட்ட நாயகனாக சென்.றோக்ஸ் கழக வீரர் ஜெப்ரி மற்றும் உரும்பிராய் கழக வீரர் ஜான்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related News