இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர்.