Oct 19, 2025
Thisaigal NewsYouTube
NZ vs AUS  டி20 தொடரை வென்றது ஆஸி.
விளையாட்டு

NZ vs AUS டி20 தொடரை வென்றது ஆஸி.

Share:

ஆக்லாந்து, பிப்ரவரி 24-

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 22 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவ் ஸ்மித் 11, கேப்டன் மிட்செல் மார்ஷ் 26, கிளென் மேக்ஸ்வெல் 6, ஜோஷ் இங்லிஷ் 5, டிம் டேவிட் 17, மேத்யூ வேட் 1, பாட் கம்மின்ஸ் 28, நேதன் எலிஸ் 11, ஆடம் ஜாம்பா 1 ரன் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் லாக்கி பெர்குசன் 4 விக்கெட்களையும் ஆடம் மில்னே, பென் சீயர்ஸ், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

175 ரன்கள் இலக்குடன் பேட் நியூஸிலாந்து அணியானது 17 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார். ஜோஷ் கிளார்க்சன் 10, டிரெண்ட் போல்ட் 16 ரன்கள் எடுத்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. ஃபின் ஆலன் 6, வில் யங் 5, கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 7, மார்க் சாப்மேன் 2, ஆடம் மில்னே 0, லாக்கி பெர்குசன் 4 ரன்களில் நடையை கட்டினர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4, நேதன் எலிஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி மற்றும் 3-வது டி 20 ஆட்டம் நாளை 25-ம் தேதி நடைபெறுகிறது.

Related News