Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கௌதம் கம்பீரால் இந்திய கிரிக்கெட்டுக்கு சங்கட நிலை
விளையாட்டு

கௌதம் கம்பீரால் இந்திய கிரிக்கெட்டுக்கு சங்கட நிலை

Share:

இந்தியா, ஜூலை 10-

கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படவுள்ள நிலையில், அவரின் மற்றுமொரு நிபந்தனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

அவர், தமது பணிக்காக கோரும் சம்பளத்தின் அளவே இந்த சங்கட நிலைக்கான காரணமாகும்.

ஏற்கனவே ராகுல் ட்ராவிட் தமது பதவிக்காக பெற்று வந்த வருடத்துக்கு 12 கோடி ரூபாய் என்ற சம்பளத்துக்கு அதிகமான சம்பளம் தமக்கு வழங்கப்படவேண்டும் என்று கம்பீர் கோரியிருக்கிறார்.

கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அவருடைய நிபந்தனையின் கீழ், டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு 20 அணிகள் என்று மூன்று அணிகள் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இதுவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, அதற்கான பதில் எதனையும் வழங்கவில்லை.

Related News