ஆமதாபாத், ஆகஸ்ட்.30-
இந்தியாவின், ஆமதாபாத்- வீர் சவர்க்கார் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த 19 வயதான சித்தி அகிலா ஃபார்ஹானா டிராமான், 86 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.
ஸ்னேட்ச் பிரிவில் 107 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 120 கிலோவையும் தூக்கியதையடுத்து சித்தி சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
அதே வேளையில், ஆண்கள் 110 கிலோ இளையோர் பிரிவில், மலேசியாவின் முகமட் ஃபாரிஸ் ஹைக்கால், 315 கிலோ பளு தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.