கோலாலம்பூர், ஜூலை.27-
உலகத் தர வரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஆடவர் இரட்டையர் ஜோடியான ஆரோன் சியா-சோ வுய் யிக், இன்று சாங்ஸோவில் நடந்த சீனா பொதுப் பூப்பந்து இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் ஃபாஜார் அல்ஃபியான்-முகமட் ஷோஹிபுல் ஃபிக்ரி ஜோடியிடம் தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
ஒலிம்பிக் விளையாட்டு மைய மைதானத்தில் நடந்த அப்போட்டியில், 15க்கு 21, 14 க்கு 21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து, இந்த பருவத்தின் நான்காவது பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தனர். எனினும், இரண்டாம் இடத்தைப் பிடித்ததற்காக அவர்களுக்கு 70 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு கிடைத்தது.