Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டி: மலேசியாவின் கனவு சிதைந்தது
விளையாட்டு

பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டி: மலேசியாவின் கனவு சிதைந்தது

Share:

பென்சில்வேனியா, ஜூன்.06-

பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியில் மலேசியாவின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அப்போட்டியில் கலந்து கொண்ட மலேசியப் போட்டியாளர்களும் தோல்வி கண்ட நிலையில், எஸ். சிவசங்கரி மட்டுமே எஞ்சியிருந்தார்.

இந்நிலையில் காலிறுதிச் சுற்றில் களமிறங்கிய அவர், எகிப்தின் அமீனா ஓர்ஃபியுடன் மோதினார். ஈடு கொடுத்து விளையாடினாலும் இறுதியில் சிவசங்கரி தோல்வி கண்டார். அவ்விருவரும் இதுவரை ஐந்து முறை சந்தித்துள்ளனர். அவற்றில் நான்கு முறை சிவசங்கரி தோல்வி கண்டுள்ளார்.

இவ்வேளையில், அமீனா, அரையிறுதி ஆட்டத்தில் ஆக வீராங்கனையான நூரான் கோஹாருடன் களம் காண்கிறார்.

Related News