கோலாலம்பூர், ஜூன்.22
தாய்லாந்தின் கோரட்டில் நடைபெற்ற 2025 ஆசிய பாரா பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பட்டங்களை வென்றதன் மூலம் தேசிய பாரா பூப்பந்து வீரர் சியா லீக் ஹூ, உலகின் முதல் நிலை வீரராக தனது நற்பெயரை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டார்.ர்.
SU5 (உடல் ஊனமுற்றோர்) பிரிவில் போட்டியிட்ட லீக் ஹூ, இந்தோனேசியாவைச் சேர்ந்த தேவா அன்ரிமுஸ்தியை 21-19, 15-21, 21-18 என்ற மூன்று செட்கள் கொண்ட சவால் மிக்க ஆட்டத்தில் தோற்கடித்து முதலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பட்டத்தை வென்றார். இந்த ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது.
இரண்டு முறை பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இவர், SU5 ஆண்கள் இரட்டையர் பிரிவில் முகமது ஃபரீஸ் அனுவாருடன் இணைந்து இந்திய ஜோடியான ஹார்டிக் மக்கர்-ருத்திக் ரகுபதியை 21-14, 21-8 என்ற செட் கணக்கில் எளிதாக தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்தார்.