கோலாலம்பூர், செப்டம்பர்.05-
சீனாவின் கோங்ஷுவில் நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண மகளிர் ஹாக்கி போட்டியின் ஏ பிரிவுக்கான தொடக்க ஆட்டத்தில், தேசிய அணி, சீனாவிடம் 0-8 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
கோங்ஷு கால்வாய் ஸ்போர்ட்ஸ் பார்க் அரங்கில் நடந்த ஆட்டத்தில், சீன அணி அதிக நேரம் காத்திருக்காமல் முதலில் மூன்று கோல்களை அடித்து அணியின் பலத்தை அதிகரித்தது.
இரண்டாவது பாதியிலும் சீனா அபாரமாக விளையாடி இறுதியில் 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதிச் செய்தது.
ஞாயிற்றுக்கிழமை மலேசியா தைவானை எதிர்கொள்ள உள்ளது. பின்னர் திங்கட்கிழமை தென் கொரியாவுக்கு எதிரான குழு நிலை ஆட்டத்தை முடிக்க உள்ளது.
ஆசியக் கிண்ண மகளிர் ஹாக்கி போட்டி இம்மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.