Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி
விளையாட்டு

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி

Share:

19 வயதுக்குட்பட்டோருக்கான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

"ஏ" பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் "பி" பிரிவில், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள்

இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மல்லுக்கட்டின. "டாஸ்" வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Related News