Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஆசிய விளையாட்டு போட்டி 2023: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி 2023: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Share:

ஆசிய விளையாட்டு போட்டி 2023 இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை என்றாலும் கைப்பந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட் போட்டி டி20-யாக நடத்தப்படுகிறது.

இன்று பெண்கள் கிரிக்கெட்டிற்கான முதல் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா- மலேசியா அணிகள் மோதின. முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. 5.4 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மழை நின்றதும் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா 39 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 67 ரன்கள் குவித்தார். ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 47 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய பெண்கள் அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது.

பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மலேசியா அணி களம் இறங்கியது. இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டது. அதன்பின் போட்டியை நடத்த சாத்தியமில்லை என கருதிய போட்டி நிர்வாகிகள், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். போட்டியில் முடிவு கிடைக்காத போதிலும், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Related News